Listen to this chapter
1
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
2
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்
3
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்
4
4. வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
5
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
6
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்
7
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது
8
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது
9
9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை
10
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா