அதிகாரம் 2

வான் சிறப்பு

Listen to this chapter

1
1. வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று
2
2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉ மழை
3
3. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின் றுடற்றும் பசி
4
4. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்
5
5. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை
6
6. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண் பரிது
7
7. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்
8
8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
9
9. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்வானம் வழங்கா தெனின்
10
10. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்வானின் றமையா தொழுக்கு
← கடவுள் வாழ்த்து நீர்த்தார் பெருமை →