அதிகாரம் 104

உழவு

Listen to this chapter

1
1. சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்உழந்தும் உழவே தலை
2
2. உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றாதெழுவாரை எல்லாம் பொறுத்து
3
3. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்
4
4. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்
5
5. இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர்
6
6. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேமென் பார்க்கும் நிலை
7
7. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்
8
8. ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு
9
9. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்தில்லாளின் ஊடி விடும்
10
10. இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்
← குடிசெயல்வகை நல்குரவு →