Listen to this chapter
1
1. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்அவர்பழி தம்பழி அன்று
2
2. இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவைதுன்பம் உறாஅ வரின்
3
3. கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்றிரப்புமோர் ஏஎர் உடைத்து
4
4. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டு
5
5. கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்றிரப்பவர் மேற்கொள் வது
6
6. கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பையெல்லா மொருங்கு கெடும்
7
7. இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்உள்ளுள் உவப்ப துடைத்து
8
8. இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்மரப்பாவை சென்றுவந் தற்று
9
9. ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்மேவார் இலாஅக் கடை
10
10. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பைதானேயும் சாலும் கரி