Listen to this chapter
1
1. கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும்
2
2. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான்
3
3. இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்வன்மையின் வன்பாட்ட தில்
4
4. இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்காலும் இரவொல்லாச் சால்பு
5
5. தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுண்ணலின் ஊங்கினிய தில்
6
6. ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கிரவின் இளிவந்த தில்
7
7. இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்கரப்பார் இரவன்மின் என்று
8
8. இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்பார்தாக்கப் பக்கு விடும்
9
9. இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ளஉள்ளதூஉம் இன்றிக் கெடும்
10
10. கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்சொல்லாடப் போஒம் உயிர்