Listen to this chapter
1
1. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை யென்னுஞ் செறுக்கு
2
2. தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்
3
3. அறிவினு ளெல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்குஞ் செய்யா விடல்
4
4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு
5
5. இலனென்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றுப் பெயர்த்து
6
6. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்
7
7. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென் றடும்
8
8. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயா தடியுறைந் தற்று
9
9. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்துன்னற்க தீவினைப் பால்
10
10. அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்