அதிகாரம் 20

பயனிலசொல்லாமை

Listen to this chapter

1
1. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்
2
2. பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கட் செய்தலிற் றீது
3
3. நயனில னென்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை
4
4. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்பண்பில்சொல் பல்லா ரகத்து
5
5. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின்
6
6. பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்மக்கட் பதடி யெனல்
7
7. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்பயனில சொல்லாமை நன்று
8
8. அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்பெரும்பய னில்லாத சொல்
9
9. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்தமாசறு காட்சி யவர்
10
10. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்
← புறங்கூறாமை தீவினையச்சம் →