Listen to this chapter
1
1. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல்
2
2. கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று
3
3. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின்
4
4. கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்கொள்ளார் அறிவுடை யார்
5
5. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாடச் சோர்வு படும்
6
6. உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்
7
7. நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்மண்மாண் புனைபாவை யற்று
8
8. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு
9
9. மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்கற்றா ரனைத்திலர் பாடு
10
10. விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்கற்றாரோ டேனை யவர்