அதிகாரம் 40

கல்வி

Listen to this chapter

1
1. கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக
2
2. எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்கண்ணென்ப வாழும் உயிர்க்கு
3
3. கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்
4
4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்
5
5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்
6
6. தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு
7
7. யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு
8
8. ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்கெழுமையும் ஏமாப் புடைத்து
9
9. தாமின் புறுவ துலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்
10
10. கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை
← இறைமாட்சி கல்லாமை →