அதிகாரம் 43

அறிவுடைமை

Listen to this chapter

1
1. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண்
2
2. சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇநன்றின்பா லுய்ப்ப தறிவு
3
3. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு
4
4. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவு
5
5. உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்கூம்பலு மில்ல தறிவு
6
6. எவ்வ துறைவ துலக முலகத்தோடவ்வ துறைவ தறிவு
7
7. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்
8
8. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதஞ்சல் அறிவார் தொழில்
9
9. எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய்
10
10. அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனு மிலர்
← கேள்வி குற்றங்கடிதல் →