அதிகாரம் 44

குற்றங்கடிதல்

Listen to this chapter

1
1. செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து
2
2. இவறலும் மாண்பிறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு
3
3. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார்
4
4. குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றந் தரூஉம் பகை
5
5. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்
6
6. தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்என்குற்ற மாகும் இறைக்கு
7
7. செயற்பால செய்யா திவறியான் செல்வம்உயற்பால தன்றிக் கெடும்
8
8. பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதொன் றன்று
9
9. வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்கநன்றி பயவா வினை
10
10. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல்
← அறிவுடைமை பெரியாரை துணைக்கோடல் →