அதிகாரம் 46

சிற்றின‌‍ஞ்சேராமை

Listen to this chapter

1
1. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும்
2
2. நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கினத்தியல்ப தாகும் அறிவு
3
3. மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னா னெனப்படுஞ் சொல்
4
4. மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கினத்துள தாகும் அறிவு
5
5. மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும்
6
6. மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்கில்லைநன் றாகா வினை
7
7. மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்எல்லாப் புகழுந் தரும்
8
8. மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்கினநலம் ஏமாப் புடைத்து
9
9. மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்இனநலத்தி னேமாப் புடைத்து
10
10. நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉ மில்
← பெரியாரை துணைக்கோடல் தெரிந்து செயல்வகை →