Listen to this chapter
1
1. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறு
2
2. செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்
3
3. எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்எண்ணுவ மென்ப திழுக்கு
4
4. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும்
5
5. நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்பண்பறிந் தாற்றாக் கடை
6
6. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடுகொள்ளாத கொள்ளா துலகு
7
7. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமுஞ் சூழ்ந்து செயல்
8
8. தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கரும்பொருள் யாதொன்று மில்
9
9. ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினைஊக்கா ரறிவுடை யார்
10
10. தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பா டஞ்சு பவர்