அதிகாரம் 5

இல்வாழ்க்கை

Listen to this chapter

1
1. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை
2
2. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை
3
3. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தா றோம்பல் தலை
4
4. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கைவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
5
5. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது
6
6. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்போஒய்ப் பெறுவ தெவன்
7
7. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாருள் எல்லாம் தலை
8
8. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து
9
9. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
10
10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்
← அறன் வலியுறுத்தல் வாழ்க்கை துணைநலம் →