அதிகாரம் 4

அறன் வலியுறுத்தல்

Listen to this chapter

1
1. அறத்தா றிதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோ டூர்ந்தான் இடை
2
2. யற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி
3
3. சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு
4
4. அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு
5
5. ஒல்லும் வகையான அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல்
6
6. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்ஆகுல நீர பிற
7
7. அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்ற தறம்
8
8. அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை
9
9. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல்
10
10. அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்புறத்த புகழும் இல
← நீர்த்தார் பெருமை இல்வாழ்க்கை →