அதிகாரம் 7

புதல்வரைப்பெறுதல்

Listen to this chapter

1
1. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்தமக்கட்பே றல்ல பிற
2
2. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின்
3
3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தந்தம் வினையான் வரும்
4
4. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ்
5
5. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
6
6. குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்
7
7. தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்
8
8. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது
9
9. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்
10
10. மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்லெனும் சொல்
← வாழ்க்கை துணைநலம் அன்புடைமை →