அதிகாரம் 8

அன்புடைமை

Listen to this chapter

1
1. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புண்கணீர் பூசல் தரும்
2
2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு
3
3. அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போ டியைந்த தொடர்பு
4
4. அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பென்னும் நாடாச் சிறப்பு
5
5. அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு
6
6. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை
7
7. என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்
8
8. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று
9
9. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப் பன்பி லவர்க்கு
10
10. அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு
← புதல்வரைப்பெறுதல் விருந்தோம்பல் →