Listen to this chapter
1
1. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது
2
2. இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
3
3. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
4
4. அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்
5
5. முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்
6
6. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
7
7. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற
8
8. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்
9
9. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல்
10
10. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்