அதிகாரம் 11

செய்நன்றியறிதல்

Listen to this chapter

1
1. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது
2
2. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது
3
3. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது
4
4. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்
5
5. உதவி வரைத்தன் றுதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து
6
6. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு
7
7. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு
8
8. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று
9
9. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன் றுள்ளக் கெடும்
10
10.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு
← இனியவை கூறல் நடுவு நிலைமை →