அதிகாரம் 9

விருந்தோம்பல்

Listen to this chapter

1
1. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு
2
2. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
3
3. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று
4
4. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந் தோம்புவான் இல்
5
5. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம்
6
6. செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு
7
7. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்
8
8. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்
9
9. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு
10
10. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து
← அன்புடைமை இனியவை கூறல் →