Listen to this chapter
1
1. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்பண்புடைமை என்னும் வழக்கு
2
2. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்பண்புடைமை என்னும் வழக்கு
3
3. உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்கபண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
4
4. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்பண்புள ராட்டும் உலகு
5
5. நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்பண்புள பாடறிவார் மாட்டு
6
6. பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்மண்புக்கு மாய்வது மன்
7
7. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கட்பண் பில்லா தவர்
8
8. நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்பண்பாற்றார் ஆதல் கடை
9
9. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்பகலும்பாற் பட்டன் றிருள்
10
10. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்கலந்தீமை யால்திரிந் தற்று