அதிகாரம் 99

சான்றாண்மை

Listen to this chapter

1
1. கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
2
2. குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்எந்நலத் துள்ளதூஉ மன்று
3
3. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடைந்துசால் பூன்றிய தூண்
4
4. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு
5
5. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்மாற்றாரை மாற்றும் படை
6
6. சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்விதுலையல்லார் கண்ணும் கொளல்
7
7. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு
8
8. இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்திண்மையுண் டாகப் பெறின்
9
9. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்காழி யெனப்படு வார்
10
10. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்தாங்காது மன்னோ பொறை
← பெருமை பண்புடைமை →