அதிகாரம் 102

நாணுடைமை

Listen to this chapter

1
1. கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்நல்லவர் நாணுப் பிற
2
2. ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லநாணுடைமை மாந்தர் சிறப்பு
3
3. ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்நன்மை குறித்தது சால்பு
4
4. அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்பிணியன்றோ பீடு நடை
5
5. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குறைபதி என்னும் உலகு
6
6. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்பேணலர் மேலா யவர்
7
7. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாணாள் பவர்
8
8. பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்அறநாணத் தக்க துடைத்து
9
9. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்நாணின்மை நின்றக் கடை
10
10. நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவைநாணால் உயிர்மருட்டி அற்று
← நன்ற்யில் செல்வம் குடிசெயல்வகை →