அதிகாரம் 109

தகயணங்குருத்தல்

Listen to this chapter

1
1. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலுமென் நெஞ்சு
2
2. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குதானைக்கொண் டன்ன துடைத்து
3
3. பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டு
4
4. கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்பேதைக் கமர்த்தன கண்
5
5. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்நோக்கமிம் மூன்றும் உடைத்து
6
6. கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்செய்யல மன்னிவள் கண்
7
7. கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்படாஅ முலைமேல் துகில்
8
8. ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்நண்ணாரும் உட்குமென் பீடு
9
9. பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கணியெவனோ ஏதில தந்து
10
10. உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்கண்டார் மகிழ்செய்தல் இன்று
← கயமை குறிப்பறிதல் →