Listen to this chapter
1
1. இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்குநோய்நோக்கொன் றந்நோய் மருந்து
2
2. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்செம்பாகம் அன்று பெரிது
3
3. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்யாப்பினுள் அட்டிய நீர்
4
4. யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்தானோக்கி மெல்ல நகும்
5
5. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்சிறக்கணித்தாள் போல நகும்
6
6. உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்ஒல்லை உணரப் படும்
7
7. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்உறாஅர்போன் றுற்றார் குறிப்பு
8
8. அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்பசையினள் பைய நகும்
9
9. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்காதலார் கண்ணே உள
10
10. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்என்ன பயனும் இல