Listen to this chapter
1
1. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்பாற்பட் டொழுகப் பெறின்
2
2. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப் புடைத்து
3
3. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே யொழிய விடல்
4
4. தக்கார் தகவிலர் என்ப தவரவர்எச்சத்தாற் காணப் படும்
5
5. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க் கணி
6
6. கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்
7
7. கெடுவாக வையா துலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு
8
8. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்கோடாமை சான்றோர்க் கணி
9
9. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின்
10
10. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்