Listen to this chapter
1
1. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள
2
2. பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்னோய்க்குத் தானே மருந்து
3
3. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு
4
4. நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்தீயாண்டுப் பெற்றாள் இவள்
5
5. வேட்ட பொழுதின் அவையவை போலுமேதோட்டார் கதுப்பினாள் தோள்
6
6. உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்கமிழ்தின் இயன்றன தோள்
7
7. தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்அம்மா அரிவை முயக்கு
8
8. வீழும் இருவர்க் கினிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு
9
9. ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கூடியார் பெற்ற பயன்
10
10. அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்செறிதோறும் சேயிழை மாட்டு