Listen to this chapter
1
1. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்மென்னீரள் யாம்வீழ் பவள்
2
2. மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்பலர்காணும் பூவொக்கும் என்று
3
3. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு
4
4. காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்மாணிழை கண்ணொவ்வேம் என்று
5
5. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்குநல்ல படாஅ பறை
6
6. மதியும் மடந்தை முகனும் அறியாபதியின் கலங்கிய மீன்
7
7. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போலமறுவுண்டோ மாதர் முகத்து
8
8. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்காதலை வாழி மதி
9
9. மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்பலர்காணத் தோன்றல் மதி
10
10. அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்