அதிகாரம் 113

காதற்சிறப்புரைத்தல்

Listen to this chapter

1
1. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்எழுதேம் கரப்பாக் கறிந்து
2
2. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்அஞ்சுதும் வேபாக் கறிந்து
3
3. இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கேஏதிலர் என்னுமிவ் வூர்
4
4. உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்ஏதிலர் என்னுமிவ் வூர்
5
5. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலேயி றூறிய நீர்
6
6. உடம்பொ டுயிரிடை என்னமற் றன்னமடந்தையொ டெம்மிடை நட்பு
7
7. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்திருநுதற் கில்லை யிடம்
8
8. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்அதற்கன்னள் நீங்கும் இடத்து
9
9. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்ஒள்ளமர்க் கண்ணாள் குணம்
10
10. கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்நுண்ணியர்எம் காத லவர்
← நலம் புனைந்துரைதல் நாணுத்துறைவுரைத்தல் →