அதிகாரம் 114

நாணுத்துறைவுரைத்தல்

Listen to this chapter

1
1. காமம் உழந்து வருந்தினார்க் கேமமடலல்ல தில்லை வலி
2
2. நோனா உடம்பும் உயிரும் மடலேறும்நாணினை நீக்கி நிறுத்து
3
3. நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்காமுற்றார் ஏறும் மடல்
4
4. காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடுநல்லாண்மை என்னும் புணை
5
5. தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடுமாலை உழக்கும் துயர்
6
6. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்றபடலொல்லா பேதைக்கென் கண்
7
7. கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்பெண்ணிற் பெருந்தக்க தில்
8
8. நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்மறையிறந்து மன்று படும்
9
9. அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்மறுகின் மறுகும் மருண்டு
10
10. யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்யாம்பட்ட தாம்படா ஆறு
← காதற்சிறப்புரைத்தல் அலரறிவுரைத்தல் →