அதிகாரம் 115

அலரறிவுரைத்தல்

Listen to this chapter

1
1. அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால்
2
2. மலரன்ன கண்ணாள் அருமை அறியாதலரெமக் கீந்ததிவ் வூர்
3
3. உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்பெறாஅது பெற்றன்ன நீர்த்து
4
4. கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்தவ்வென்னும் தன்மை இழந்து
5
5. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்வெளிப்படுந் தோறும் இனிது
6
6. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்திங்களைப் பாம்புகொண் டற்று
7
7. ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்நீராக நீளுமிந் நோய்
8
8. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்காமம் நுதுப்பேம் எனல்
9
9. அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்பலர்நாண நீத்தக் கடை
10
10. தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்கௌவை எடுக்குமிவ் வூர்
← நாணுத்துறைவுரைத்தல் பிரிவாற்றாமை →