Listen to this chapter
1
1. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க் குரை
2
2. இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்புன்கண் உடைத்தால் புணர்வு
3
3. அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்பிரிவோ ரிடத்துண்மை யான்
4
4. அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்தேறியார்க் குண்டோ தவறு
5
5. ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்நீங்கின் அரிதால் புணர்வு
6
6. பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்நல்குவர் என்னும் நசை
7
7. துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கைஇறைஇறவா நின்ற வளை
8
8. இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்இன்னா தினியார்ப் பிரிவு
9
9. தொடிற்சுடின் அல்லது காமநோய் போலவிடிற்சுடல் ஆற்றுமோ தீ
10
10. அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்பின்இருந்து வாழ்வார் பலர்