Listen to this chapter
1
1. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்கூற்றுநீர் போல மிகும்
2
2. கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்குரைத்தலும் நாணுத் தரும்
3
3. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்நோனா உடம்பின் அகத்து
4
4. காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்ஏமப் புணைமன்னும் இல்
5
5. துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவுநட்பினுள் ஆற்று பவர்
6
6. இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்துன்பம் அதனிற் பெரிது
7
7. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்யாமத்தும் யானே உளேன்
8
8. மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திராஎன்னல்ல தில்லை துணை
9
9. கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்நெடிய கழியும் இரா
10
10. உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்நீந்தல மன்னோவென் கண்