அதிகாரம் 119

பசப்புறு பருவரல்

Listen to this chapter

1
1. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்பண்பியார்க் குரைக்கோ பிற
2
2. அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்மேனிமேல் ஊரும் பசப்பு
3
3. சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறாநோயும் பசலையும் தந்து
4
4. உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்கள்ளம் பிறவோ பசப்பு
5
5. உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்மேனி பசப்பூர் வது
6
6. விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்முயக்கற்றம் பார்க்கும் பசப்பு
7
7. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்அள்ளிக்கொள் வற்றே பசப்பு
8
8. பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்துறந்தார் அவரென்பார் இல்
9
9. பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்நன்னிலையர் ஆவர் எனின்
10
10. பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்நல்காமை தூற்றார் எனின்
← கண்விதுப்பழிதல் தனிப்படர்மிகுதி →