Listen to this chapter
1
1. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனி
2
2. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி
3
3. வீழுநர் வீழப் படுவார்க் கமையுமேவாழுநம் என்னும் செருக்கு
4
4. வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்வீழப் படாஅர் எனின்
5
5. நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோதாம்காதல் கொள்ளாக் கடை
6
6. ஒருதலையான் இன்னாது காமங்காப் போலஇருதலை யானும் இனிது
7
7. பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்
8
8. வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்துவாழ்வாரின் வன்கணார் இல்
9
9. நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டிசையும் இனிய செவிக்கு
10
10. உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்செறாஅஅய் வாழிய நெஞ்சு