Listen to this chapter
1
1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்
2
2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்கு
3
3. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்தாற்றின் அடங்கப் பெறின்
4
4. நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிது
5
5. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து
6
6. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப் புடைத்து
7
7. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
8
8. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்நன்றாகா தாகி விடும்
9
9. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு
10
10. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து