அதிகாரம் 122

கனவுநிலையுரைத்தல்

Listen to this chapter

1
1. காதலர் தூதொடு வந்த கனவினுக்கியாதுசெய் வேன்கொல் விருந்து
2
2. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்குயலுண்மை சாற்றுவேன் மன்
3
3. நனவினான் நல்கா தவரைக் கனவினால்காண்டலின் உண்டென் உயிர்
4
4. கனவினான் உண்டாகும் காமம் நனவினான்நல்காரை நாடித் தரற்கு
5
5. நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்கண்ட பொழுதே இனிது
6
6. நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்காதலர் நீங்கலர் மன்
7
7. நனவினான் நல்காக் கொடியார் கனவினான்என்னெம்மைப் பீழிப் பது
8
8. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்நெஞ்சத்தார் ஆவர் விரைந்து
9
9. நனவினான் நல்காரை நோவர் கனவினான்காதலர்க் காணா தவர்
10
10. நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்காணார்கொல் இவ்வூ ரவர்
← நினைந்தவர் புலம்பல் பொழுதுகண்டிரங்கல் →