அதிகாரம் 123

பொழுதுகண்டிரங்கல்

Listen to this chapter

1
1. மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்வேலைநீ வாழி பொழுது
2
2. புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்வன்கண்ண தோநின் துணை
3
3. பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்துன்பம் வளர வரும்
4
4. காதலர் இல்வழி மாலை கொலைக்களத்தேதிலர் போல வரும்
5
5. காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்மாலைக்குச் செய்த பகை
6
6. மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாதகாலை அறிந்த திலேன்
7
7. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலருமிந் நோய்
8
8. அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்குழல்போலும் கொல்லும் படை
9
9. பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்து
10
10. பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைமாயுமென் மாயா உயிர்
← கனவுநிலையுரைத்தல் உறுப்புநலனழிதல் →