அதிகாரம் 125

நெஞ்சொடுகிளித்தல்

Listen to this chapter

1
1. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்எவ்வநோய் தீர்க்கு மருந்து
2
2. காத லவரிலர் ஆகநீ நோவதுபேதமை வாழியென் நெஞ்சு
3
3. இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்பைதல்நோய் செய்தார்கண் இல்
4
4. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்தின்னும் அவர்க்காணல் உற்று
5
5. செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்உற்றால் உறாஅ தவர்
6
6. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு
7
7. காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சேயானோ பொறேனிவ் விரண்டு
8
8. பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்பின்செல்வாய் பேதையென் நெஞ்சு
9
9. உள்ளத்தார் காத லவராக உள்ளிநீயாருழைச் சேறியென் நெஞ்சு
10
10. துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமாஇன்னும் இழத்தும் கவின்
← உறுப்புநலனழிதல் நிறையழிதல் →