அதிகாரம் 127

அவர்வயின்விதும்பல்

Listen to this chapter

1
1. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல்
2
2. இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்கலங்கழியும் காரிகை நீத்து
3
3. உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரல்நசைஇ இன்னும் உளேன்
4
4. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்கோடுகொ டேறுமென் நெஞ்சு
5
5. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்நீங்குமென் மென்தோள் பசப்பு
6
6. வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்பைதல்நோய் எல்லாம் கெட
7
7. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்கண்ணன்ன கேளிர் வரின்
8
8. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்துமாலை அயர்கம் விருந்து
9
9. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்வருநாள்வைத் தேங்கு பவர்க்கு
10
10. பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்உள்ளம் உடைந்துக்கக் கால்
← நிறையழிதல் குறிபரிவுறுத்தல் →