Listen to this chapter
1
1. பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்காணா தமையல கண்
2
2. ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துகூடற்கண் சென்றதென் னெஞ்சு
3
3. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்பழிகாணேன் கண்ட இடத்து
4
4. காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்காணேன் தவறல் லவை
5
5. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்பொய்த்தல் அறிந்தென் புலந்து
6
6. இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்கள்ளற்றே கள்வநின் மார்பு
7
7. மலரினும் மெல்லிது காமம் சிலரதன்செவ்வி தலைப்படு வார்
8
8. கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்என்னினும் தான்விதுப் புற்று
9
9. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்கள்ளுக்கில் காமத்திற் குண்டு
10
10. தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்காமம் நிறைய வரின்