Listen to this chapter
1
1. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேநீயெமக் காகா தது
2
2. உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்செறாஅரெனச் சேறியென் நெஞ்சு
3
3. கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீபெட்டாங் கவர்பின் செலல்
4
4. இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சேதுனிசெய்து துவ்வாய்காண் மற்று
5
5. பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு
6
6. தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்தினிய இருந்ததென் நெஞ்சு
7
7. நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்மாணா மடநெஞ்சிற் பட்டு
8
8. எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு
9
9. துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடையநெஞ்சந் துணையல் வழி
10
10. தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடையநெஞ்சம் தமரல் வழி