Listen to this chapter
1
1. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்
2
2. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்தேரினும் அஃதே துணை
3
3. ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்
4
4. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
5
5. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லைஒழுக்க மிலான்கண் உயர்வு
6
6. ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக் கறிந்து
7
7. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவ ரெய்தாப் பழி
8
8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்
9
9. ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்
10
10. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்கல்லா ரறிவிலா தார்