Listen to this chapter
1
1. புல்லா திராஅப் புலத்தை அவருறும்அல்லல்நோய் காண்கம் சிறிது
2
2. உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிதுமிக்கற்றால் நீள விடல்
3
3. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்புலந்தாரைப் புல்லா விடல்
4
4. ஊடி யவரை உணராமை வாடியவள்ளி முதலரிந் தற்று
5
5. நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகைபூவன்ன கண்ணார் அகத்து
6
6. துனியும் புலவியும் இல்லாயின் காமம்கனியும் கருக்காயும் அற்று
7
7. ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வதுநீடுவ தன்றுகொல் என்று
8
8. நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்காதலர் இல்லா வழி
9
9. நீரும் நிழல தினிதே புலவியும்வீழுநர் கண்ணே இனிது
10
10. ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்கூடுவேம் என்ப தவா