Listen to this chapter
1
1. பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு
2
2. ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ் கென்பாக் கறிந்து
3
3. கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று
4
4. யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று
5
5. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்
6
6. உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்
7
7. வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று
8
8. தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்எம்மை மறைத்திரோ என்று
9
9. தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்இந்நீரர் ஆகுதிர் என்று
10
10. நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்யாருள்ளி நோக்கினீர் என்று