அதிகாரம் 15

பிறநில்விழையமை

Listen to this chapter

1
1. அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று
2
2. பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்தறம்பொருள் கண்டார்க ணில்
3
3. அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடைநின்றாரிற் பேதையா ரில்
4
4. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்தொழுகு வார்
5
5. எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்
6
6. எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி
7
7. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்
8
8. அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்பெண்மை நயவா தவன்
9
9. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கறனென்றோ ஆன்ற வொழுக்கு
10
10. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறற்குரியாள் தோள்தோயா தார்
← ஒழுக்கமுடைமை பொறாமையுடைமை →