Listen to this chapter
1
1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை
2
2. பொறுத்த லிறப்பினை யென்றும் அதனைமறத்த லதனினும் நன்று
3
3. இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை
4
4. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்
5
5. ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
6
6. ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்
7
7. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்தறனல்ல செய்யாமை நன்று
8
8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்தகுதியான் வென்று விடல்
9
9. துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்
10
10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொ னோற்பாரிற் பின்