Listen to this chapter
1
1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்தழுக்கா றிலாத இயல்பு
2
2. விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின்
3
3. அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்பேணா தழுக்கறுப் பான்
4
4. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக் கறிந்து
5
5. அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்வழுக்கியுங் கேடீன் பது
6
6. கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉ மின்றிக் கெடும்
7
7. அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்
8
8. அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்
9
9. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்
10
10. அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்