Listen to this chapter
1
1. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும்
2
2. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்நடுவன்மை நாணு பவர்
3
3. சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரேமற்றின்பம் வேண்டு பவர்
4
4. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்றபுன்மையில் காட்சி யவர்
5
5. அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின்
6
6. அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழக் கெடும்
7
7. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்
8
8. அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்
9
9. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்திறனறிந் தாங்கே திரு
10
10. இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்வேண்டாமை யென்னுஞ் செருக்கு