Listen to this chapter
1
1. அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்புறங்கூறா னென்றல் இனிது
2
2. அறனழீஇ யல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை
3
3. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்அறங்கூறும் ஆக்கந் தரும்
4
4. கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்கமுன்னின்று பின்னோக்காச் சொல்
5
5. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்
6
6. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்திறன்தெரிந்து கூறப் படும்
7
7. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தேற்றா தவர்
8
8. துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்என்னைகொல் ஏதிலார் மாட்டு
9
9. அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்புன்சொ லுரைப்பான் பொறை
10
10. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னு முயிர்க்கு